தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'அணுக்கழிவுகளால் பாதிப்பு இல்லை; அணு உலைகளை மூட அவசியமில்லை!'

நீலகிரி: அணுக்கழிவுகளால் எந்த பாதிப்பும் இல்லை; அதனால் இந்தியாவில் உள்ள அணு உலைகளை மூட வேண்டிய அவசியம் இல்லை என இந்திய அணுசக்தி கழகத்தின் முன்னாள் தலைவர் எம்.ஆர். சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

former india atomic power association srinivasan

By

Published : Jul 28, 2019, 9:55 AM IST

நீலகிரி மாவட்டம் உதகையில் நடைபெற்ற தனியார் புத்தக வெளியீட்டு விழாவில் இந்திய அணுசக்தி கழகத்தின் முன்னாள் தலைவர் எம்.ஆர். சீனிவாசன் கலந்துகொண்டார்.

அப்போது அவர் பேசுகையில், "கூடங்குளம் அணுமின் நிலையத்தில் தற்போது மூன்றாவது, நான்காவது அணு உலைகள் அமைக்கும் பணி நிறைவடையும் தருவாயில் இருக்கிறது. ஐந்து, ஆறு அணு உலைகள் அமைக்கும் பணி நடைபெற்றுவருகிறது.

இன்னும் ஐந்து ஆண்டுகளில் கூடங்குளம் அணுமின் நிலையத்தின் மின் உற்பத்தி ஆறாயிரம் மெகாவாட்டை எட்டும். அணு உலைகளிலிருந்து வெளியேறும் அணுக்கழிவுகளால் பொதுமக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. தற்போது சேகரிக்கப்படும் அணுக்கழிவுகள் அதே இடத்தில் சுத்திகரிக்கப்பட்டு சிறு, சிறு கற்களாக மாற்றும் திட்டம் இருக்கிறது.

அணு உலைகளில் அதிக பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கபட்டுள்ளது. எனவே அணு உலைகளை மூட வேண்டிய அவசியம் இல்லை.

அமெரிக்க, ஃபிரான்ஸ், சீனா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளில் செயல்பட்டுவரும் அணு உலைகளை அந்த நாடுகள் மூட மாட்டார்கள்; எனவே இந்தியாவும் மூடாது. மேலும் ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் 700 மெகாவாட் திறன் கொண்ட பத்து அணு உலைகளை அமைக்கும் பணிகள் நடைபெற்றுவருகின்றன" எனத் தெரிவித்தார்.

இந்திய அணுசக்தி கழகத்தின் முன்னாள் தலைவர் எம்.ஆர். சீனிவாசன் பேட்டி

ABOUT THE AUTHOR

...view details