தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இந்திய குடும்ப நலச்சங்கம் சார்பில் பெண் சிசுக்கொலை குறித்த விழிப்புணர்வு - நீலகிரி சிறுவர்கள் பாலியல் விழிப்புணர்வு

நீலகிரி: இந்திய குடும்ப நலச்சங்கம் சார்பில் பெண் சிசுக்கொலை, பள்ளி மாணவிகளிடையே ஏற்படும் பாலியல் குற்றங்கள் தொடர்பான கருத்தரங்கு நிகழ்ச்சி நடைபெற்றது.

at nilgiris Family Planning Association of India conducted awarness  on  infants killing, sex education
இந்திய குடும்ப நல சங்கம் சார்பில் பெண் சிசு கொலை குறித்த விழிப்புணர்வு

By

Published : Mar 12, 2020, 9:36 AM IST

தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் பள்ளி சிறுவர்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகிவருகின்றனர். இதனால் அவர்கள் மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் பாதிக்கப்படுகின்றனர். தற்போது பெண் சிசுக்கொலை ஒரு சில இடங்களில் தொடர்ந்து அதிக அளவில் நடைபெற்றுவருகிறது. இதனைத் தடுக்கும்விதமாக நீலகிரி மாவட்டம் குன்னூரில் குடும்ப நலச்சங்கத்தின் சார்பாக ஒருநாள் கருத்தரங்கு நடைபெற்றது.

அந்நிகழ்ச்சியில் மருத்துவர் ரேமா பிரதாப் கலந்துகொண்டு கூறுகையில், "நீலகிரி மாவட்டத்தில் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள பள்ளிக் குழந்தைகள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்‌. ஆசிரியர்கள், பெற்றோர் மத்தியில் முதலில் கரு உருவாகுதல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல் அவசியம். இதன்மூலம் எதிர்காலத்தில் பெண் சிசு கொல்லப்படுவது கட்டுபடுத்த முடியும்" என்றார்.

மேலும் இது குறித்து தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்து செயல்படுத்த வேண்டும் எனவும் கோரிக்கைவிடுக்கப்பட்டது.

இந்திய குடும்ப நலச்சங்கம் சார்பில் பெண் சிசுக்கொலை, பாலியல் குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு

இதையும் படிங்க:’கொரோனா காலர் ட்யூன் எரிச்சலை ஏற்படுத்துகிறது’ - தடைசெய்யக் கோரி வழக்கு!

ABOUT THE AUTHOR

...view details