தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

உதவி ஆட்சியரை பணி செய்யவிடாமல் தடுத்த வியாபாரிகள் சங்கம் - Tamil latest news

நீலகிரி: வியாபாரிகள் சங்கத்தினர் பணி செய்யவிடாமல் தடுத்ததாகக் கூறி உதவி ஆட்சியர் ரஞ்சித் சிங் குன்னூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

வியாபாரிகள் சங்கத்தினர்
வியாபாரிகள் சங்கத்தினர்

By

Published : May 17, 2020, 12:15 PM IST

நீலகிரி மாவட்டம் குன்னூர் நகராட்சிக்குட்பட்ட மார்கெட் பகுதிகளில் 900க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. கரோனா தொற்று பாதிப்பால் ஊரடங்கு உத்தரவு காரணமாக 50 நாட்களுக்கும் மேலாக கடைகள் திறக்கப்படாமல் இருந்தன.

இந்நிலையில், ஊட்டி உள்ளிட்ட பகுதிகளில் கடைகள் திறக்கப்பட்டன. கரோனா தொற்று பாதிக்கப்பட்ட குன்னூரிலும் கடைகள் திறப்பதற்காக உதவி ஆட்சியர் ரஞ்சித் சிங் தலைமையில் நேற்று முன்தினம் (மே 15) வியாபாரிகளுடன் கூட்டம் நடத்தப்பட்டது.

அப்போது பேசிய உதவி ஆட்சியர், கரோனா தொற்று பாதிப்படையாத குறிப்பிட்ட சில இடங்களில் மட்டுமே கடைகள் திறக்கப்படும் என கூறியுள்ளார். உடனே வியாபாரிகள் சங்கத் தலைவர் பரமேஸ்வரன், நாங்கள் கூறும் கடைகளை தான் நீங்கள் திறக்க வேண்டும் என உதவி ஆட்சியரை வற்புறுத்தியதோடு, அவதூறாக பேசியுள்ளார்.

இதைத் தொடர்ந்து, பணி செய்ய இடையூறு ஏற்படுத்தியதாகக் கூறி பரமேஸ்வரன் மீது உதவி ஆட்சியர் குன்னூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்நிலையில், ஊரடங்கு உத்தரவை மீறி வியாபாரிகளை திரட்டி போராட்டம் நடத்துவதாக வியாபாரிகள் சங்கம் அறிவித்ததால் இவர்களை கைது செய்ய நூற்றுக்கணக்கான காவல் துறையினர் குவிக்கப்பட்டனர்.

பின்னர் நடந்த பேச்சுவார்த்தையில் பெரும்பாலான வியாபாரிகள் உதவி ஆட்சியர் கூறிய விதிமுறைகளை ஒப்புக்கொண்டதால், நேற்று (மே 16) கடைகள் திறக்கப்பட்டன.

இதையும் படிங்க: மதுரையில் இன்று புதிதாக 11 பேருக்கு கரோனா தொற்று

ABOUT THE AUTHOR

...view details