தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வெடிமருந்து தொழிற்சாலை கார்ப்பரேட்டுக்கா? தொழிலாளர்கள் உண்ணாவிரதம் - குன்னுார் தொழிலாளர்கள் உண்ணாவிரத போராட்டம்

நீலகிரி: குன்னுார் அருகே வெடிமருந்து தொழிற்சாலையை, கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வழங்குவதை கண்டித்து தொழிலாளர்கள் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.

factory-workers-hunger

By

Published : Aug 23, 2019, 6:21 PM IST

நீலகிரியில் வேலை வாய்ப்பிற்கு முக்கியத்துவம் பெற்ற குன்னூர் அருகேயுள்ள அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலையை கார்ப்பரேட்டுக்கு வழங்குவதை கண்டித்து, 30 நாட்கள் தொடர் வேலை நிறுத்த போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

4ஆவது நாளான இன்று, தொழிற்சாலையை சேர்ந்த தொழிலாளர்கள் மற்றும் அலுவலர்கள், பணிக்கு செல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டுவருகிறார்கள். அவர்கள் இன்று தொடர் உண்ணாவிரத போராட்டத்தையும் தொடங்கியுள்ளனர்.

தொழிலாளர்கள் உண்ணாவிரத போராட்டம்.

அடுத்தக்கட்டமாக வரும் 27ஆம் தேதி தொழிலாளர்கள் மற்றும் குடும்பத்தினர், விவசாயிகளை ஒருங்கிணைத்து மாபெரும் மறியல் போராட்டம் நடத்தவும் முடிவு செய்துள்ளார்கள்.

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details