நாடுமுழுவதும் பொதுத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 41 படைக்கல தொழிற்சாலைகளை தனியாருக்கு தாரைவார்க்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்நிறுவனங்களில் மொத்தம் ஒரு லட்சம் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இதில் ராணுவத்திற்கு தேவையான போர் உதிரிபாகங்கள் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன.
மத்திய அரசை கண்டித்து ஏஐடியுசி சார்பில் போராட்டம் - private
நீலகிரி: குன்னூர் வெடிமருந்து தொழிற்சாலையை மத்திய அரசு, தனியாருக்கு வழங்குவதை கண்டித்து வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடப்போவதாக ஏஐடியுசி-யின் அகில இந்திய துணைத்தலைவர் சுப்பராயன் தெரிவித்துள்ளார்.
இதில், குன்னுார் அருகேயுள்ள அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலையும் தனியாருக்கு வழங்குவதாக இருந்த நிலையில் ஏஐடியுசி-யின் அகில இந்திய துணைத்தலைவரும், மக்களவை உறுப்பினருமான கே.சுப்பராயன், நேரில் சென்று அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலையை பார்வையிட்டு பின்பு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், மத்திய அரசு தேச விரோத மற்றும் மக்கள் விரோத செயலில் ஈடுபடும் விதமாக, 41 படைக்கல தொழிற்சாலைகளை தனியார் நிறுவனங்களுக்கு வழங்க முன்வந்துள்ளது.
சொந்த நாட்டில் அந்நியனுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறது. இதை கண்டித்து நாடு முழுவதும் ஒரு லட்சம் தொழிலாளர்கள் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர். எனவே மத்திய அரசு, தனியார்களுக்கு துணைபோவதை கைவிட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.