நீலகிரி: குன்னூர், அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலையில் 1800 தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். ஒன்றிய அரசின் பாதுகாப்பு துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த தொழிற்சாலையில் வெடிமருந்துகள் தயாரித்து ராணுவம் உட்பட முப்படைகளுக்கு அனுப்பப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இந்த தொழிற்சாலை உட்பட இந்தியாவில் உள்ள 41 தொழிற்சாலைகளை ஏழு பிரிவுகளாக கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வழங்க ஒன்றிய அரசு முடிவெடுத்துள்ளது.
இதனை கண்டித்து, DFLU, NEU மற்றும் CFLU உள்ளிட்ட மூன்று தொழிற்சங்கங்களின் கூட்டுக்குழு சார்பில், (ஜுன் 17) முதல் மீண்டும் போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.
கார்டைட் வெடிமருந்து தொழிற்சாலை ஊழியர்கள் போராட்டம் - cunnoor Cardate Factory
அருவங்காடு கார்டைட் வெடிமருந்து தொழிற்சாலையை, கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வழங்கும் ஒன்றிய அரசின் முடிவால் தொழிலாளர்கள் மீண்டும் போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.
கார்டைட் வெடிமருந்து தொழிற்சாலை ஊழியர்கள் போராட்டம்
முதல்கட்டமாக கோரிக்கைகள் அடங்கிய கருப்பு பேட்ஜ் அணிந்து போராட்டம் தொடங்கியது. தீர்வு கிடைக்கும்வரை தொடர் போராட்டத்தில் ஈடுபட தொழிலாளர்கள் முடிவு செய்துள்ளனர்.
இதையும் படிங்க:'மேகதாது அணை விவகாரத்தில் கோட்டைவிட்ட தமிழ்நாடு அரசு' - ராமதாஸ்
Last Updated : Jun 19, 2021, 5:52 PM IST