தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குன்னூரில் காட்டெருமை தாக்கி ஒருவர் படுகாயம்! - Nilgiris latest news

நீலகிரி : குன்னூர் அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலை வளாகத்துக்குள் நடைப்பயிற்சி சென்று கொண்டிருந்த நபரை காட்டெருமை தாக்கியதில் படுகாயம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

aruvankadu-byson-attack
aruvankadu-byson-attack

By

Published : Oct 16, 2020, 3:24 PM IST

நீலகிரி மாவட்டம் குன்னூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காட்டெருமைகளின் எண்ணிக்கை அதிகமாகவுள்ளது. இதில் அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலை வளாகத்துக்குள் ஏராளமான காட்டெருமைகள் சென்று வருகின்றன.

இந்நிலையில் தொழிற்சாலை வளாகத்துக்குள் கேந்திரிய வித்யாலயா பள்ளி அருகே நடைப்பயிற்சி சென்று கொண்டிருந்த அந்தோணி ராஜ் என்ற ஊழியரை காட்டெருமை ஒன்று விரட்டி தாக்கியது.

இதில் படுகாயமடைந்த அந்தோணிராஜ் வெடிமருந்து தொழிற்சாலை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று மேல் சிகிச்சைக்காக கோவை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து இந்தப் பகுதிகளை வனத்துறையினர் ஆய்வு செய்து சுற்றுப்புற பகுதிகளில் வேலி அமைக்க அலுவலர்களிடம் வலியுறுத்தி சென்றனர்.

இதையும் படிங்க: நாய்களுக்கு விஷம் கொடுத்து சந்தன மரம் வெட்டிக் கடத்தல்!

ABOUT THE AUTHOR

...view details