தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குன்னூர் ராணுவ பயிற்சி கல்லூரிக்கு அருணாச்சல பிரதேச ஆளுநர் வருகை - Nilgiri District News

குன்னூர் வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரி அருகில் உள்ள போர் நினைவு தூணில் அருணாச்சல பிரதேச ஆளுநர் பி.டி.மிஸ்ரா இன்று (ஏப். 5) மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

குன்னூர் ராணுவ பயிற்சி கல்லூரி
குன்னூர் ராணுவ பயிற்சி கல்லூரி

By

Published : Apr 5, 2022, 2:51 PM IST

Updated : Apr 5, 2022, 4:17 PM IST

நீலகிரி: 1947ஆம் ஆண்டு பாகிஸ்தான் ராணுவம், ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தை கைப்பற்றுவதை தடுத்து நிறுத்தி வெற்றி பெற்றதன் நினைவாக, குன்னூர் வெலிங்டன் ராணுவ பயிற்சி வளாகத்தில் நினைவு தூண் அமைக்கப்பட்டுள்ளது.

இங்கு நீலகிரிக்கு வரும் முக்கிய நபர்கள், ராணுவ உயர் அதிகாரிகள், மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்துவது வழக்கம். இந்நிலையில், குன்னுார் வெலிங்டன் ராணுவ பயிற்சி மையத்திற்கு அருணாச்சல பிரதேச ஆளுநர் பி.டி.மிஸ்ரா வருகை தந்தார்.

குன்னூர் ராணுவ பயிற்சி கல்லூரிக்கு அருணாச்சல பிரதேச ஆளுநர் வருகை

அக்கல்லூரி உள்ள போர் நினைவு தூணில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். இந்த நிகழ்சியில், வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரியின் மூத்த அதிகாரிகள், முன்னாள் ராணுவ அதிகாரிகள் கலந்து கொண்டு போர் நினைவு இடத்தில் மலர் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

Last Updated : Apr 5, 2022, 4:17 PM IST

ABOUT THE AUTHOR

...view details