தமிழ்நாடு

tamil nadu

By

Published : Feb 17, 2020, 4:33 PM IST

ETV Bharat / state

இயற்கை சுற்றுச்சூழலை பாதுகாக்கும் சைக்கிள் பேரணியில் ராணுவ வீரர்கள்!

நீலகிரி: இயற்கை சுற்றுச்சூழலை பாதுகாக்க வலியுறுத்தி 40 கிலோ மீட்டர் தூரம் ராணுவ வீரர்களின் சைக்கிள் பேரணி நடைபெற்றது.

சைக்கிள் பேரணி
சைக்கிள் பேரணி

நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு அமைப்புகளின் இயற்கை ஆர்வலர்கள் சுற்றுச்சூழலை பாதுகாக்க வலியுறுத்தி பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்திவருகின்றனர்.

அந்தவகையில், தற்போது ராணுவ வீரர்களும் புதிய முயற்சியாக," இயற்கையை பாதுகாப்போம், மரங்களை வளர்ப்போம்" என்பதை வலியுறுத்தி,விழிப்புணர்வு வாசகங்களுடன் சைக்கிள் பேரணியை நடத்தினார்கள்.

இயற்கை சுற்றுச்சூழலை பாதுகாக்கும் சைக்கிள் பேரணி

இவர்கள் நீலகிரி மாவட்டம் முழுவதும் வாரந்தோறும் சனிக்கிழமைகளில் சென்று பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். இதற்காக பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் இயற்கை வளங்களை பாதுகாப்பது, காற்று மாசுபாடு கட்டுப்பாடு, மரங்கள் வளர்ப்பு போன்ற இயற்கை வளங்கள் சார்ந்த விழிப்புணர்வு ஏற்படுத்திவருகின்றனர்.

இதையும் படிங்க:வட்டாரக் கல்வி அலுவலர் தேர்வுக்கு 22 ஆயிரம் பேர் ஆப்சென்ட்!

ABOUT THE AUTHOR

...view details