நீலகிரி மாவட்டம், குன்னுார் வெலிங்டன் ராணுவ முகாமில், தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த இளைஞர்களுக்கு ராணுவப் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. பயிற்சி பெறும் வீரர்கள், நாட்டின் பல இடங்களுக்கு பணி புரிய அனுப்பப்படுகின்றனர்.
வெல்லிங்டன் ராணுவ பயிற்சி முகாமில் 350 ராணுவ வீரர்கள் சத்தியப்பிரமாணம் - வெல்லிங்டன் ராணுவ பயிற்சி முகாம்
குன்னூர்: வெல்லிங்டன் ராணுவ பயிற்சி முகாமில் பயின்ற 350 ராணுவ வீரர்கள் சத்தியப்பிரமாணம் எடுத்துக்கொண்டனர்.
![வெல்லிங்டன் ராணுவ பயிற்சி முகாமில் 350 ராணுவ வீரர்கள் சத்தியப்பிரமாணம் army](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-6405123-514-6405123-1584172647487.jpg)
இந்த முகாமில், 46 வாரங்கள் பயிற்சி பெற்ற 350 பேர், ராணுவ வீரர்களாக பணிபுரிய சத்தியப்பிரமாணம் எடுக்கும் நிகழ்ச்சி இன்று (மார்ச் 14) வெலிங்டன் பேரக்ஸில் நடைபெற்றது. இதில், பகவத்கீதை, பைபிள், குரான் புத்தகங்கள் மற்றும் தேசியக் கொடி மீது, ராணுவ வீரர்கள், சத்தியப்பிரமாணம் எடுத்துக்கொண்டனர்.
பின்னர் வீரர்களின் கம்பீரமான அணிவகுப்பு மரியாதையை, ராணுவ பயிற்சி கல்லூரி கமாண்டன்ட் ராஜேஸ்வர் சிங், ஏற்றுக் கொண்டார். பயிற்சியில் சிறந்து விளங்கிய 5 வீரர்களுக்கு பதக்கம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் உயர் அலுவலர்கள், இளநிலை அலுவலர்கள் கலந்துகொண்டனா்.