தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வெலிங்டன் ராணுவ மையத்தில் எளிமையாக நடந்த 73ஆவது ராணுவ தினம்! - நீலகிரி மாவட்ட செய்திகள்

குன்னூரில் உள்ள வெலிங்கடன் ராணுவ மையத்தில் 73ஆவது ராணுவ தினம் கரோனா பதிப்பு காரணமாக எளிமையாக நடைபெற்றது.

Wellington Army academy
Wellington Army academy

By

Published : Jan 16, 2021, 9:08 AM IST

நீலகிரி:நாடு சுதந்திரம் பெற்ற பின்பு 1948ஆம் ஆண்டு ஜனவரி 15ஆம் தேதி, ஆங்கிலேய ராணுவ தளபதி பிரான்சிஸ் பட்சரிடமிருந்து இந்தியாவின் ராணுவ தளபதி பீல்ட் மார்ஷல் கரியப்பா ராணுவ தளபதியாக பொறுப்பேற்றுக் கொண்டார். இந்த வரலாற்று நிகழ்வை கவுரவிக்கும் விதமாகவும், நாட்டுக்காக உயிர் நீத்த வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையிலும் ஆண்டு தோறும் ஜனவரி 15ஆம் தேதி இந்திய ராணுவ தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இதனையொட்டி, இந்தாண்டு ராணுவ தினத்தை முன்னிட்டு நீலகிரி மாவட்டம் குன்னூர் வெலிங்டனில் உள்ள போர் நினைவு சின்னத்தில் போரில் வீர மரணம் அடைந்த வீரர்களுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் ராணுவ பயிற்சி மைய கமாண்டர் கர்னல் என்.கே தாஸ் அஞ்சலி செலுத்தினார். இந்த நிகழ்வு கரோனா பதிப்பு காரணமாக எளிமையாக நடைபெற்றது.

இதையும் படிங்க:பாரம்பரிய நடனமாடி பொங்கல் விழா கொண்டாடிய மலைவாழ் மக்கள்...!

ABOUT THE AUTHOR

...view details