அடர்ந்த வனப்பகுதியை கொண்டுள்ள நீலகிரி மாவட்டத்தில் யானை, கரடி, சிறுத்தை போன்ற வன விலங்குகள் அதிகளவில் உள்ளன. அவ்வப்போது உணவு மற்றும் தண்ணீர் தேவைக்கு மனிதர்கள் குடியிருக்கும் பகுதிக்குள் விலங்குகள் வருவதால் குடியிருப்புவாசிகள் அச்சப்படுகின்றனர்.
சில நேரங்களில் யானைகள் மனிதர்களை தாக்குவதால் உயிரிழப்புகளும் ஏற்படுகிறது. வறட்சியான காலத்தில் யானைகள் சமவெளி பகுதிகளிலிருந்து உணவு மற்றும் தண்ணீர் தேடி மலைப் பகுதிக்கு வருகின்றன. அவ்வாறு வரக்கூடிய வன விலங்குகள் குன்னூர் மேட்டுப்பாளையம் இடையே உள்ள வனப்பகுதிக்குள் சுற்றித்திரியும்.