தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பழங்குடியின கிராமத்திற்கு செல்ல முடியாத நிலையில் அங்கன்வாடி ஊழியர்கள்! - Nilgiris District News

நீலகிரி: வாகன வசதிகள் இல்லாத காரணத்தினால் அங்கன்வாடி ஊழியர்கள் பழங்குடியின கிராமங்களுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

அங்கன்வாடி ஊழியர்கள்
அங்கன்வாடி ஊழியர்கள்

By

Published : Jun 28, 2020, 1:10 AM IST

நீலகிரி மாவட்டம் குன்னூர் சுற்றுவட்டார பகுதிகளில் கரோனா தொற்றானது அதிகரித்து வருவதால், அரசு பேருந்துகள் இயக்குவது குறைக்கப்பட்டது. இதனால் நகர் பகுதி மட்டுமின்றி பழங்குடியின கிராமங்களுக்கு செல்ல சிரமம் ஏற்பட்டுள்ளது.

குன்னூர் பர்லியாறு இடையே உள்ள குரும்பாடி, சேம்பக்கரை போன்ற கிராமங்களை மாவட்ட ஆட்சியர் தத்தெடுத்து அவர்களுக்கு தேவையான ஊட்டச்சத்து உணவை அங்கன்வாடி ஊழியர்களை வழங்குமாறு கூறினார்.

ஆனால், நகர் பகுதியில் இருந்து பேருந்து இல்லாததால் அவ்வழியே வரக்கூடிய வாகனங்களை எதிர்பார்த்து வருகின்றனர். எனவே இவர்களுக்கு வாகன வசதியை மாவட்ட நிர்வாகம் செய்து தர வேண்டும் என்று மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதையும் படிங்க:டாஸ்மாக் குடோனுக்கு வந்த லாரி ஓட்டுநருக்கு கரோனா

ABOUT THE AUTHOR

...view details