தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆடு மேய்க்கச் சென்ற முதியவர் காட்டு யானை தாக்கி உயிரிழப்பு - old man killed by wild elephant

உதகை அருகே ஆடு மேய்க்கச் சென்ற முதியவரை காட்டு யானை தாக்கியதில் அவர் உயிரிழந்தார்.

ஆடு மேய்க்கச் சென்ற முதியவர் காட்டு யானை தாக்கி உயிரிழப்பு
ஆடு மேய்க்கச் சென்ற முதியவர் காட்டு யானை தாக்கி உயிரிழப்பு

By

Published : Oct 16, 2022, 12:49 PM IST

நீலகிரி: உதகை அருகே உள்ள வாழை தோட்டம் கிராமத்தில் பெருமாள் (78) என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்தார். இவர் தனக்கு சொந்தமான ஆடுகளை கிராமத்தின் அருகே உள்ள சிங்காரா வனப்பகுதியில் தினந்தோறும் மேய்ச்சலுக்கு கொண்டு சென்று வருவது வழக்கம். நேற்று (அக் 15) மாலை வழக்கம்போல ஆடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டிச் சென்ற பெருமாள், இரவு நேரமாகியும் வீடு திரும்பவில்லை.

ஆடுகள் மட்டுமே வீட்டிற்கு வந்துள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த அவரது உறவினர்கள், பெருமாளை தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் இரவு நேரம் என்பதாலும், தொடர்ந்து மழை பெய்ததாலும் பெருமாளை கண்டுபிடிக்க முடியவில்லை. இதனையடுத்து இன்று (அக் 16) காலை மீண்டும் பெருமாளை தேடினர். அப்போது வாழைத்தோட்டம் சுடுகாடு பகுதியில் அவரது உடல் படுகாயங்களுடன் கிடப்பதை கண்டுபிடித்தனர்.

மேலும் காட்டு யானை தாக்கியதால் அவர் இறந்திருப்பதும் தெரிய வந்துள்ளது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மசினகுடி காவல்துறையினர் மற்றும் சிங்கார வனத்துறையினர், பெருமாளின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக உதகை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து சிங்கார வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க:கோவையில் ரயில் மோதி யானை உயிரிழப்பு

ABOUT THE AUTHOR

...view details