தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பாகனுடன் கட்டிப்பிடித்து உறக்கம்: பாகனுக்குக் குழந்தையான 'அம்மு' குட்டி யானை! - ammu elephant at niligiri

நீலகிரி: முதுமலை யானை முகாமிற்கு கொண்டுவரபட்ட 'அம்மு' என்ற குட்டி யானையை குழந்தையைப் போல் பார்த்துக்கொள்ளும் பாகனின் பாசம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

AMMU BABY ELEPHANT
அம்மு குட்டி யானை

By

Published : Dec 8, 2019, 11:10 PM IST

Updated : Dec 8, 2019, 11:28 PM IST

சத்தியமங்கலம் பகுதியில், கடந்த அக்டோபர் மாதத்தில் தாயைப் பிரிந்த குட்டி யானை குடியிருப்புப் பகுதியில் சுற்றித் திரிந்தது. இதைப் பார்த்த வனத்துறையினர் குட்டியானையை மீண்டும் யானைக் கூட்டத்துடன் சேர்க்க முயற்சி செய்தனர். ஆனால், காட்டு யானைக் கூட்டம் அக்குட்டி யானையை சேர்த்துக் கொள்ளவில்லை.

இதனால் அந்தக் குட்டி யானை சத்தியமங்கலத்திலிருந்து முதுமலை வளர்ப்பு யானை முகாமிற்கு கொண்டு வரப்பட்டது. பிறந்த இரண்டு மாதங்களே ஆகியுள்ள குட்டி யானைக்கு அம்மு என பெயரிடப்பட்டு, பொம்மன் என்ற பாகன் அதனைப் பராமரிக்க நியமிக்கப்பட்டார். அம்மு யானையை தாய் வளர்ப்பில் பராமரிப்பதுபோல் பாசத்துடன் அவர் பராமரித்து வருகிறார்.

பாகனுக்குக் குழந்தையான அம்மு குட்டி யானை
குட்டி யானைக்கு மூன்று நேரமும் லேக் டோஜன் பால் பவுடர் வெந்நீரில் கலக்கி ட்யூப் மூலம் பால், குளிர் ஏற்படாதவாறு கூண்டில் ஹீட்டர் , பாகனுடன் கட்டிப்பிடித்து உறக்கம், பந்துடன் விளையாட்டு என சகல வசதிகளுடன் அம்மு வளர்ந்து வருகிறது. மேலும், குட்டி யானையை வனத்துறையினர் மூன்று கேமராக்களைப் பொருத்தி கண்காணித்து வருகின்றனர்.
Last Updated : Dec 8, 2019, 11:28 PM IST

ABOUT THE AUTHOR

...view details