தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நீலகிரியில் அமமுக வேட்பாளர் தீவிர பிரச்சாரம்! - 2019தேர்தல்

நீலகிரி: குந்தா ஒன்றியப் பகுதியில், நீலகிரி மக்களவைத் தொகுதி அமமுக வேட்பாளர் எம்.ராமசாமி தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்.

தொகுதி அமமுக வேட்பாளர் எம்.ராமசாமி தேர்தல் பரப்புரை

By

Published : Apr 15, 2019, 3:15 PM IST

நீலகிரி மக்களவைத் தொகுதி அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் எம். ராமசாமி குந்தா ஒன்றிய பகுதிகளான எடக்காடு, இத்தலார், நஞ்சநாடு, நுந்தளா உள்ளிட்ட பகுதிகளில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்.

அப்போது திமுக, அதிமுக கட்சிகளை சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் அமமுகவில் இணைந்தனர். பின்னர் மக்களிடம் பேசிய அவர் நீலகிரி மக்களவைத் தொகுதியில் அமமுக கட்சிக்கு வாக்களியுங்கள் என வேண்டுகோள் விடுத்தார்.

இதில் அமமுக நீலகிரி மாவட்ட கழக செயலாளர் எஸ். கலைச்செல்வன், கழக அமைப்புச் செயலாளர் தேனாடு லட்சுமணன் , ஒன்றிய செயலாளர் மோகன், கழக சிறுபான்மை பிரிவு மாநில செயலாளர் தம்பி இஸ்மாயில் மற்றும் கழக நிர்வாகிகள் பங்கேற்றனர்.

நீலகிரியில் அமமுக வேட்பாளர் தீவிர பிரச்சாரம்!

ABOUT THE AUTHOR

...view details