நீலகிரி மாவட்டத்தில் அதிமுகவில் கோஷ்டி பூசல் இருந்தது. இந்த நிலையில் மாவட்ட செயலாளராக இருந்த முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் புத்திசந்திரன் நீக்கப்பட்டு, கப்பச்சியை சேர்ந்த வினோத் என்பவர் மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்டார்.
பொது மக்களுக்கு இ-பாஸ் கிடைக்காத நேரத்தில், இவருக்கு மட்டும் இபாஸ் வழங்கி சென்னை சென்று வந்தார்.
சென்னை சென்று வந்த இவர் தனிமைப்படுத்தாமல் தொடர்ந்து ஊரடங்கு நேரத்திலும் பல்வேறு இடங்களிலும் வரவேற்புக் கூட்டம் நடத்தி பங்கேற்று வருவது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
குன்னூர் நகரில் நடந்த வரவேற்புக் கூட்டத்தில் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்த போது, அரசு மருத்துவமனை செல்லும் மவுண்ட் ரோடு முழுவதும் வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டது.
மேலும் கரோனா பாதிப்பு தடுப்பு நடவடிக்கையாக தகுந்த இடைவெளி கட்டாயமாக்கப்பட்ட நிலையில் அதிமுகவின் ஆளுங்கட்சியினர் இதனை பின்பற்றாமல் கூட்ட நெரிசலில் போட்டோக்கள் எடுப்பதற்கு முண்டி அடித்துக் கொண்டனர்.
சுமார் இரண்டு மணி நேரத்திற்கு மேல் வாகனங்களை சாலையிலேயே வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
அதிமுக கூட்டத்தில் காற்றில் பறந்த தனிநபர் இடைவெளி! - அதிமுக புதிய மாவட்ட செயலாளர்
நீலகிரி: அதிமுக கூட்டத்தில் தகுந்த இடைவெளி காற்றில் பறந்த சம்பவம் நடந்துள்ளது,
அதிமுக புதிய மாவட்ட செயலாளர்
இடையூறு ஏற்படுத்திய ஆளுங்கட்சியினர் மீது மக்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.