நீலகிரி மாவட்டம் கூடலூர் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ஜெயசீலனை ஆதரித்து முதலமைச்சர் பழனிசாமி, உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணி பரப்புரை மேற்கொண்டனர்.
அப்போது மக்கள் பேசிய முதலமைச்சர் பழனிசாமி,’ உதகையில் 447 கோடி ரூபாய் செலவில் மருத்துவக் கல்லூரி அமைக்கப்படும். வீடுகள் இல்லாதவர்களுக்கு வீடு கட்டித் தரப்படும். 37 ஆயிரத்து 500 விவசாயிகளுக்கு 152 கோடி ரூபாய் விவசாயக் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
கூடலூர் தேவர்சோலை பகுதியல் 10 கோடி ரூபாய் மதிப்பில் பேருந்து நிலையம் கட்ட நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. கூடலூர் பகுதியில் நிலவி வரும் செக்ஷன் 17 பிரச்சினை ஆட்சி அமைந்ததும் முற்றிலுமாக நீக்கப்படும். அரசு தேயிலைத் தோட்ட கழகத்தில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு சொந்தமாக காங்கீரிட் வீடு அமைத்துக் கொடுக்கப்படும். ஊதிய உயர்வு செய்யப்படும்.
கூடலூர் பகுதிக்கு 110 திறன் கொண்ட மின்சாரம் நிலையம் அமைக்கப்படும். மன்னார்குடியில் மரவகண்டி பகுதியில் படகு இல்லம் அமைக்கப்படும். ஊசி முனைப்பகுதியில் சுற்றுலாத்தலம் அமைக்கப்படும்’ என்றார்.
இதையும் படிங்க:சொன்ன நேரத்திற்கு வராத ராதிகா... காலி இருக்கைகள் மத்தியில் உரை