நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள சூண்டி பகுதியில் மான் வேட்டையில் சிலர் ஈடுபடுவதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து வனத்துறையினர் ரகசிய தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, சூண்டி பகுதியில் அதிமுக வர்த்தக அணி மாவட்ட துணை செயலாளர் கே.டி.பாவா, அவரது நண்பர்கள் மூன்று பேர் மான் வேட்டையில் ஈடுபட்டது தெரியவந்தது.
கடமான் வேட்டையாடிய அதிமுக நிர்வாகி கைது! - nilgri Moose hunting
நீலகிரி: கடமான் வேட்டையாடி இறைச்சியுடன் அதிமுக முக்கிய நபர் கைது செய்யப்பட்டது கூடலூர் பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
-deer-poaching
இதனையடுத்து, இருவர் தப்பியோடிய நிலையில், இருவரை கைது செய்த வனத்துறையினர் அவர்களிடம் இருந்த 18 கிலோ கடமான் இறைச்சியை பறிமுதல் செய்தனர். மேலும், கடமான் வேட்டையாடியது குறித்து வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு, தப்பியோடிய இருவரையும் தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க:தமிழ்நாடு மின்சார துறை வாரிய ஊழியர்களுக்கு நோட்டீஸ்