தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

15 ஆண்டுகளுக்கு பிறகு கீழ்கோத்தகிரி வனப்பகுதியில் தென்படும் இருவாச்சி பறவைகள்... - Iruvacchi birds

கோத்தகிரி வனப்பகுதியில் 15 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இருவாச்சி பறவைகள் கூடுகட்டி வாழ்வதால் பறவை ஆர்வலர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Etv Bharat
Etv Bharat

By

Published : Aug 25, 2022, 11:14 AM IST

நீலகிரி: மலைகளின் அரசி என அழைக்கப்படும் நீலகிரி மாவட்டத்தில் அமைந்துள்ள இயற்கை சூழலில் அதிக எண்ணிக்கையில் பறவைகள் வாழ்ந்து வருகின்றன.

மனிதர்கள் நடமாட்டம் இல்லாத, பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் மட்டுமே வாழக்கூடியது HORNBILL என அழைக்கப்படும் இருவாச்சி பறவைகள். இப்பறவைகள் ஆரம்ப காலங்களில் நீலகிரி மாவட்டத்தில் வாழ்ந்து வந்தாலும் சமீப காலங்களில் எண்ணிக்கையில் குறைந்தே காணப்பட்டன.

இந்நிலையில் கீழ் கோத்தகிரி, கரிக்கையூர் வனப்பகுதியில் அமைந்துள்ள இயற்கை காடுகளில் தற்போது இருவாச்சி பறவைகள் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது. மனிதர்கள் நடமாட்டம் இல்லாத, பசுமை நிறைந்த கீழ் கோத்தகிரி வனப்பகுதியில் 15 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இருவாச்சி பறவைகள் அப்பகுதியில் குடியேறி கூண்டு அமைத்திருப்பது இயற்கை ஆர்வலர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பார்ப்பதற்கு ஹெலிகாப்டர் போன்ற காட்சி அளிக்கும் இருவாட்சி பறவைகள் தற்போது கீழ் கோத்தகிரி வனப்பகுதியில் தென்படுவதால் இப்பகுதிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் புகைப்படம் எடுக்க அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

உலகம் முழுவதும் 54 வகை இருவாச்சி பறவைகள் இருக்கின்றன. இந்தியாவின் மேற்குத்தொடர்ச்சி மலைகள், அருணாசலப்பிரதேசம், அந்தமான் தீவுகள், நேபாளம் ஆகிய இடங்களில் வாழ்கின்றன. இந்தியாவில் 9 வகை இருவாச்சிகள் உள்ளன.

கீழ்கோத்தகிரி வனப்பகுதியில் 15 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கூடுகட்டி வாழும் இருவாச்சி பறவைகள்

இருவாச்சிப் பறவைகள் உட்கொண்டு வெளியேற்றும் எச்சத்தில் உள்ள தாவர விதைகள் உயிர்ப்புத்தன்மைமிக்கவை. இப்பறவைகள் எச்சங்களால்தான் காட்டில் இருக்கிற மரங்கள் பெருகுகின்றன. இப்பறவைகள் இருக்கிற காடுகளை மழைக்காடுகள் என அழைக்கிறார்கள்.

மழைக் காடுகள் இல்லையென்றால் இருவாட்சி பறவைகளும் இல்லை என பறவை ஆர்வலர்கள் கருதுகின்றனர். காடு வளர்வதற்கு முக்கிய காரணியாக இப்பறவைகள் இருக்கின்றன. மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் மரங்கள் வெட்டப்படுவதால், இருவாச்சிப் பறவைகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருவதாக பறவை ஆர்வலர்கள் தெரிவித்தனர்.

மிகவும் உயரமான மரங்களில் வசிக்கும் இருவாச்சி பறவைகள், மரங்கள் அழிக்கப்படுவதன் காரணமாக தன் இனத்தை பெருக்கிக்கொள்ள முடியாமல் தவிக்கின்றன. இருவாச்சி பறவை இனம் அழிந்தால் மேற்குத் தொடர்ச்சி மலையில் இருக்கும் பல வகை அரிய மரங்கள் அழிந்து விடும் என்கிறார்கள் சுற்றுச் சூழல் ஆர்வலர்கள்.

இந்நிலையில் 15 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இருவாச்சி பறவைகள் கூடுகட்டி வாழ்வதால் பறவை ஆர்வலர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

இதையும் படிங்க: ஆய்வுக்குச் சென்ற பெண் அரசு அதிகாரியை மிரட்டிய கல்குவாரி உரிமையாளர்...

ABOUT THE AUTHOR

...view details