தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

5 நாட்களுக்கு பிறகு மீண்டும் நீலகிரி மலை ரயில் இயக்கம்!! - மலை இரயில் பாதை சீரமைப்பு பணி

மண் சரிவு காரணமாக நிறுத்தப்பட்ட ஊட்டி மலை ரயில் சேவை 5 நாட்களுக்கு பிறகு மீண்டும் துவங்கப்பட்டுள்ளது.

5 நாட்களுக்கு பிறகு மீண்டும் நீலகிரி மலை ரயில் இயக்கம்
5 நாட்களுக்கு பிறகு மீண்டும் நீலகிரி மலை ரயில் இயக்கம்

By

Published : Dec 19, 2022, 2:35 PM IST

Updated : Dec 19, 2022, 3:30 PM IST

5 நாட்களுக்கு பிறகு மீண்டும் நீலகிரி மலை ரயில் இயக்கம்

நீலகிரி மாவட்டத்தில் இயக்கப்படும் மலை ரயில் உலகப்பிரசித்தி பெற்றதாகும். இந்த மலை இரயில் ஆங்கிலேயர்களால் 1899ஆம் ஆண்டு மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் வரை இயக்கப்பட்டது. இதனை அடுத்து 1908ஆம் ஆண்டு உதகை வரை நீட்டிக்கப்பட்டது.

ஆசியாவிலேயே 22 கிலோ மீட்டர் மலைப்பாதையில் பற்சக்கரங்களைக் கொண்டு இயக்கப்படும் ஒரே மலை ரயில் என்ற பெருமைக்குரியது. இந்த மலை ரயிலில் பயணிப்பது சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக உள்ளது.

தற்போது நீலகிரி மாவட்டத்தில் தொடர் மழை பெய்து வந்ததால் மலை ரயில் பாதையில் ஆங்காங்கே மண் சரிவும் பாறைகளும் விழுகிறது.

கடந்த 5 நாட்களாக மலை இரயில் சேவை நிறுத்தி வைக்கப்பட்டது. நேற்று பாதை சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இதனை தொடர்ந்து மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் வரை மீண்டும் ரயில் போக்குவரத்து மீண்டும் துவங்கியது. சுற்றுலா பயணிகள் மலை ரயிலில் ஆர்வமுடன் பயணம் மேற்கொண்டனர்.

இதையும் படிங்க: நீலகிரி மலை ரயிலை வாடகைக்கு எடுத்த 15 சுற்றுலாப் பயணிகள் - அரளவைக்கும் வாடகைத்தொகை!

Last Updated : Dec 19, 2022, 3:30 PM IST

ABOUT THE AUTHOR

...view details