தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

15 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் நீராவி எஞ்சின்: குன்னூர்-உதகை இடையே சோதனை ஓட்டம் - steam engine coonoor to ooty

நீலகிரி: பதினைந்து ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நீராவி எஞ்சினை பயன்பாட்டுக்கு கொண்டுவரும் வகையில் குன்னூர் முதல் உதகை வரை சோதனை ஓட்டம் நடைபெற்றது.

ooty train steam engine

By

Published : Oct 24, 2019, 11:04 AM IST

நீலகிரி மாவட்டம் குன்னூரில் நூற்றாண்டு பழமையான நீராவி எஞ்சின் தினமும் மேட்டுப்பாளையம் முதல் குன்னூர் வரை இயக்கப்பட்டு வருகிறது. இந்த எஞ்சின் பல்சக்கரம் மூலம் இயங்கி வருகிறது. ஆனால் குன்னூரிலிருந்து உதகை வரை டீசல் எஞ்சின் மட்டுமே இயக்கப்பட்டுவந்த நிலையில். பதினைந்து ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நீராவி எஞ்சினை பயன்பாட்டுக்கு கொண்டுவரும் வகையில் குன்னூர் முதல் உதகை வரை சோதனை ஓட்டம் நடைபெற்றது.

குன்னூர் முதல் உதகை வரை இயக்கப்படும் நீராவி எஞ்சின்

இதில் குன்னூர் முதல் உதகை வரை இயக்க நேரம் மற்றும் எரிபொருள் குறித்து கணக்கிடப்பட்டுள்ளது. குறிப்பிட்ட நேரத்தில் வந்ததால் பாரம்பரியம் மாறாமல் இதே என்ஜினை இந்த வழித்தடத்தில் தினந்தோறும் இயக்கவேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிக்க: தென் மாவட்ட ரயில்களை மீண்டும் இயக்கக் கோரிக்கை!

ABOUT THE AUTHOR

...view details