தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நீதிபதிகளை நியமிக்கக் கோரி வழக்கறிஞர்கள் சாலை மறியல்

நீலகிரி: நீதிபதிகளை நியமிக்க கோரி கூடலூரில் வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தை புறகணித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மறியல் போராட்டம்
மறியல் போராட்டம்

By

Published : Jan 11, 2020, 8:12 AM IST

நீலகிரி மாவட்டத்தில் கூடலூர், பந்தலூர் என இரு தாலுக்காக்கள் உள்ளன. 3 மாநில எல்லை பகுதியாக இருப்பதால் பல குற்ற சம்பவங்கள் இங்கு நடந்துவருகிறது. குறிப்பாக இரண்டு காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகம், மாவட்ட வன அலுவலகம், இரண்டு நகராட்சி அலுவலகம் , ஒரு கோட்டாட்சியர் அலுவலகம், இரண்டு வட்டாட்சியர் அலுவலகங்கள் இங்கு இயங்கி வருகிறது.

கூடலூரில் சார்பு நீதிமன்றம், நீதித்துறை நடுவர் நீதிமன்றம், உரிமையியல் நீதிமன்றம், கூடுதல் உரிமையியல் நீதிமன்றம் ஆகியவை உள்ளது. அதேபோல், பந்தலூரில் நடுவர் நீதிமன்றம் உள்ளது. இந்த அனைத்து நீதிமன்றங்களிலும் கடந்த ஒன்றரை ஆண்டாக நீதிபதிகள் பணியிடங்கள் காலியாக உள்ளது. இதனால் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வழக்குகள் தேங்கி கிடப்பதாக கூடலூர் வழக்கறிஞர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

கூடலூர் நீதிமன்றங்களுக்கு என தனி நீதிபதி இல்லாத காரணத்தால், வாரத்தில் ஒருநாள் மட்டும் ஊட்டியில் இருந்து நீதிபதிகள் வந்து வழக்குகளை விசாரித்து செல்கின்றனர். இதனால் பொதுமக்கள், காவல்துறையினர், வனத்துறையினர் என பல்வேறு தரப்பினர் கடும் பாதிப்பை சந்தித்து வருகின்றனர்.

மறியல் போராட்டம்

இதனால் ஆத்திரம் அடைந்த வழக்குறைஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டு கூடலூர் நீதிமன்றம் முன்பு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் சிறிது நேரம் கூடலூர் பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. நீதிபதிகள் நியமனத்திற்காக உறிய நடவடிக்கை எடுக்க வில்லை எனில் ஜனவரி 20ஆம் தேதி முதல் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: 'தருமபுரி பாலியல் விவகாரம்: ஆசிரியர் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டால் உரிய நடவடிக்கை'

ABOUT THE AUTHOR

...view details