நீலகிரி மாவட்டம் கூடலூர் சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட எல்லைப் பகுதியான செதலயம் பகுதியில் புலி பதுங்கி இருப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.
இதனை அடுத்து வனச்சரகர் சசிகுமார் அடங்கிய வன குழுவினர் புலியை தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது புதரில் மறைந்திருந்த புலி வனச்சரகர் சசிகுமாரை தாக்கியது.
உடனே சக வன குழுவினர் போராடி புலியை விரட்டினர். பின்னர் படுகாயமடைந்த வனச்சரகர் சசிகுமாரை மீட்டு, வயநாட்டில் உள்ள தனியார் மருத்துமனையில் சேர்த்தனர். தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக அவர் கோழிக்கோடு மருத்துவமனைக்கு கொண்டு செல்லபட்டார்.