நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகே உள்ள ஆதிவாசி கிராமமான பம்பாலக்கோம்பை பகுதியில் சுமார் 20க்கும் மேற்பட்ட குரும்பர் இனத்தைச் சேர்ந்த மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்த பகுதியில் பல ஆண்டுகளாக குடிநீர், சாலை, மின்சாரம் உள்ளிட்ட எந்தவித அடிப்படை வசதிகளும் மாவட்ட நிர்வாகம் செய்து கொடுக்கவில்லை.
அடிப்படை வசதிகள் இன்றி தவிக்கும் ஆதிவாசி கிராமம் - Adivasi village
நீலகிரி: குன்னூர் அடுத்த பம்பாலக்கோப்பை ஆதிவாசி கிராமத்தில் பல ஆண்டுகளாக அடிப்படை வசதியின்றி மக்கள் தவித்து வருகின்றனர்.
பாம்பலக்கோப்பை கிராமம்
அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி பலமுறை அரசு அலுவலர்களுக்கு கோரிக்கை வைத்தும், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால், அப்பகுதி மக்கள் தவித்து வருகின்றனர். மேலும் அரசு அலுவலர்கள் விரைந்து அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.