தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கருத்தடை சிகிச்சை செய்துக்கொண்ட பெண் மரணம் - நீலகிரியில் நடந்தது என்ன? - nilgiri Nankem Hospital

தனியார் மருத்துவமனையில் கருத்தடை அறுவை சிகிச்சை செய்து கொண்டப் பெண் ஓரிரு நாளில் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கருத்தடை சிகிச்சை செய்துக்கொண்ட பெண் மரணம் - நீலகிரியில் நடந்தது என்ன?
கருத்தடை சிகிச்சை செய்துக்கொண்ட பெண் மரணம் - நீலகிரியில் நடந்தது என்ன?

By

Published : Nov 20, 2022, 5:46 PM IST

நீலகிரி: நீலகிரி மாவட்டம் பெட்டட்டி பகுதியை சேர்ந்தவர்கள் ஜெய்குமார் - அனுசியா தம்பதி. இவர்களுக்கு கடந்த நவ.10 ஆம் தேதி குன்னூரில் உள்ள நன்கெம் தனியார் மருத்துவமனையில் குழந்தை பிறந்தது.

இதனைத் தொடர்ந்து இரண்டு நாள் கழித்து அனுசியா குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்து கொண்டார். அறுவை சிகிச்சை முடிந்தும் தொடர்ந்து அனுசியா மயக்க நிலையில் இருந்துள்ளார்.

அதனால் அவரை கோவையில் உள்ள குப்புசாமி நாயுடு தனியார் மருத்துவமனைக்கு உறவினர்கள் கொண்டுச் சென்றனர். அங்கு மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அனுசியா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அதனைத் தொடர்ந்து ஜெயக்குமாரின் சகோதரி சரோஜா, குன்னூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் பிரிவு 174 சந்தேக மரணம் என்று வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: மீனவர் மீது கும்பல் தாக்குதல்: மனைவி கண்ணீர் மல்க கோரிக்கை

ABOUT THE AUTHOR

...view details