நீலகிரி மாவட்டம் முள்ளிகூர் கிராமத்தில் 75 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவருக்கு கடந்த சில நாட்களாக காய்ச்சல், மூச்சு திணறலுடன் மருத்துவ சிகிச்சை எடுக்காமல் வீட்டில் இருந்தார். இந்நிலையில், நேற்று (ஜூலை 7) இரவு திடீரென அவர் உயிரிழந்தார்.
அவருக்கு கரோனா அறிகுறிகள் இருந்ததால் வைரஸ் தொற்றால்தான் இறந்திருக்கக் கூடும் என்ற அச்சம் பொதுமக்களிடையே எழுந்தது. இதனால் அவரது உடலை அடக்கம் செய்ய அக்கிராம மக்களிடையே குழப்பம் ஏற்பட்டுள்ளது. பின்னர் இது குறித்து சுகாதாரத் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த சுகாதரத் துறையினர், கிராமத்தை சுற்றி கிருமிநாசினி தெளித்ததோடு, இறந்த மூதாட்டியின் உடலில் இருந்து பரிசோதனைக்காக ரத்த மாதிரியை எடுத்தனர்.