தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பள்ளி வாகனத்தை வழிமறித்த ஒற்றை காட்டு யானை! ஓட்டம் பிடித்த வாகன ஓட்டிகள் - பள்ளி வாகனத்தின் கண்ணாடியை நொறுக்கியது

நீலகிரியில் பள்ளி வாகனம் ஒன்றை வழிமறித்த ஒற்றை காட்டு யானை, கண்ணாடிகளை உடைத்து அட்டகாசம் செய்தது. வாகனத்தின் உள்ளே பள்ளி குழந்தைகள் இல்லாததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.

காட்டு யானை
காட்டு யானை

By

Published : Jun 16, 2022, 1:20 PM IST

நீலகிரி: கோத்தகிரி அருகே முள்ளூர் பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக ஒற்றை காட்டு யானை நடமாட்டம் உள்ளது. இதனால், அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் வெளியே வர முடியாமல் அச்சத்துடன் உள்ளனர். வனப்பகுதியில் இருந்து அடிக்கடி தேசிய நெடுஞ்சாலையில் உலாவரும் ஒற்றை காட்டு யானையால் வாகன ஓட்டிகளும் செய்வதறியாமல் திகைத்துள்ளனர்.

இந்நிலையில் இன்று (ஜூன் 16) மேட்டுப்பாளையம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் பள்ளி வாகனம் ஒன்றை காட்டு யானை மறித்துள்ளது. அப்போது ஓட்டுநர் வாகனத்தின் பின்புறமாக அச்சத்துடன் ஓடிய காட்சியை பின்னால் இருந்த வாகன ஓட்டிகள் படம் பிடித்துள்ளனர். பள்ளி வாகனத்தில் குழந்தைகள் யாரும் இல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

நெடுஞ்சாலையில் வழி மறித்த காட்டு யானை

மேலும் வாகனத்தின் கண்ணாடியையும் காட்டு யானை உடைத்தது. எனவே, வனத்துறையினர் யானையின் நடமாட்டத்தை கண்காணித்து பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு , அதனை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

இதையும் படிங்க:வனப் பணியாளரை காட்டு யானை தாக்கும் பதைபதைக்கும் வீடியோ!

ABOUT THE AUTHOR

...view details