தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கோடை கண்காட்சிக்கு வாடையில் நடவுப்பணி! - கோடை கண்காட்சிக்கு தயாரான சிம்ஸ் பூங்கா

நீலகிரி: சிம்ஸ் பூங்காவில் இந்த ஆண்டு கோடை சீசனுக்கு சுற்றுலா பயணிகளை கவர வெளிநாடுகளில் இருந்து 2 லட்சத்து 50 ஆயிரம் நாற்றுக்கள் வரவழைக்கப்பட்டு நடவு பணி தொடங்கியது.

சிம்ஸ்பூங்காவில் பல்வேறு விதமான செடிகள் நடும்பணி
சிம்ஸ்பூங்காவில் பல்வேறு விதமான செடிகள் நடும்பணி

By

Published : Jan 13, 2020, 9:08 PM IST

நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் கோடை சீசனுக்கு சுற்றுலா பயணிகளை கவர தோட்டக்கலை துறை சார்பில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்படும். இதே போன்று இந்த ஆண்டு சுற்றுலா பயணிகளை கவர உள்நாடு மற்றும் வெளிநாடுகளிலிருந்து புதிய ரக மலர்செடிகள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.

குறிப்பாக, சால்வியா, ஆன்டினம், பால்சம், பெக்கோனியா, மேரிகோல்டு, பிரஞ்ச் மேரிகோல்டு, பேன்சி பிளாக்ஸ், டெல்பினியம், ஹோலிஹாக், ஜெரானியம், ஜின்னியா, பிரிமுளா , கிளியோம், உட்பட பல்வேறு வண்ணங்களிலான, 110க்கும் மேற்பட்ட 2.50 லட்சம் மலர் நாற்றுக்கள் அமெரிக்கா, ஜப்பான், பிரான்ஸ் , ஜெர்மன், நெதர்லாந்து உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து வரவழைக்கப்பட்டுள்ளன.

சிம்ஸ்பூங்காவில் பல்வேறு விதமான செடிகள் நடும்பணி

இன்று இந்த பணிக்கான பூமி பூஜை போடப்பட்டு நாற்றுக்கள் நடும் பணி தொடங்கியது. நீலகிரி மாவட்ட தோட்டக்கலை துறை உதவி இயக்குநர் பெபிதா தலைமையில், நடைபெற்ற இந்த பணியில் ஊழியர்கள் அனைவரும் இணைந்து நாற்றுகளை நட்டனர். மேலும் வரும் மே மாதம் இறுதியில் 62ஆவது பழ கண்காட்சிக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் தோட்டக்கலை சார்பில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுவருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:

கோயில் பணிகள் - சிற்ப கலை மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்க நீதிமன்றம் ஆணை!

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details