தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சூறைக்காற்றில் மரம் முறிந்து பேருந்தில் விழுந்து விபத்து! நூலிழையில் உயிர் தப்பிய பயணிகள்! திக் திக் நிமிடங்கள்!

Coonoor-Mettupalayam highway: குன்னூர் - மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் கனமழை காரணமாக திடீரென சாலையின் ஓரத்தில் இருந்த மரம் முறிந்து அரசு பேருந்து மீது விழுந்ததால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

oonoor Mettupalayam highway
குன்னூர் - மேட்டுப்பாளையம் நெடுஞ்சாலையில் மரம் முறிந்து பேருந்தின் மீது விழுந்ததால் பரபரப்பு

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 23, 2023, 4:32 PM IST

Coonoor Mettupalayam highway

நீலகிரி: தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமாகி உள்ள நிலையில், மாநிலம் முழுவதும் தொடர்ந்து லேசானது முதல் கனமழை வரை பெய்து வருகிறது. இந்நிலையில், நீலகிரிமாவட்டம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.

கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. மேலும், மண் சரிவு ஏற்பட்டு உள்ளன. மழையின் காரணமாக பல இடங்களில் மரங்கள் சரிந்து விழுந்துள்ளன. இந்நிலையில் குன்னூர் - மேட்டுப்பாளையம் சாலையில் மரப்பாலம் பகுதியில் அரசு விரைவுப் பேருந்து சென்று கொண்டிருந்த போது சாலையின் ஓரத்தில் இருந்த ராட்சத மரம் சூறைக்காற்றினால் திடீரென பேருந்தின் மேல் தளத்தில் விழுந்தது.

இதனால் பேருந்து பலத்த சேதம் ஏற்பட்டது. இந்நிலையில் பேருந்தில் பயணம் செய்த பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இந்த சம்பவம் குறித்து குன்னூர் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இத்தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் போராடி மரத்தை அகற்றினர்.

பின்னர், பேருந்தில் பயணம் செய்த பயணிகளை தீயணைப்புத்துறையினர் பத்திரமாக மீட்டு வேறொரு பேருந்தில் அனுப்பி வைத்தனர். இதனால் குன்னூர் - மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனால் வாகனங்கள் சாலையில் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

இதையும் படிங்க:“இது என்கவுண்டர் இல்லை..தற்காப்பு” - ரவுடி கொம்பன் ஜெகன் என்கவுண்டர் குறித்து திருச்சி எஸ்பி விளக்கம்!

ABOUT THE AUTHOR

...view details