நீலகிரி மாவட்டம், குன்னூர் பகுதியில் இரண்டு நாட்களாக அவ்வப்போது மழை பெய்துவருகிறது. இதனால், மலைப்பாதையில் போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டுவருகிறது. இந்நிலையில், குன்னூர் மரப்பாலம் பகுதியில் இருந்த ராட்சத மரம் ஒன்று சாலையில் சென்ற இருசக்கர வாகனம் மீது முறிந்து விழுந்தது. இதனால் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது. தகவலறிந்து வந்த காவல் துறையினர் காயமடைந்தவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
மரம் முறிந்து விழுந்ததில் ராணுவ வீரர் பலி - மரம் முறிந்து விழுந்தது
நீலகிரி: கனமழை காரணமாக குன்னூர் மலைப்பாதையில், ராட்சத மரம் முறிந்து விழுந்தில் ராணுவ வீரர் பலியாகியுள்ளார்.
அரசு மருத்துவமனை
ஆனால் அங்கு அவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். பின்னர் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் இறந்தவர் பாலக்காட்டைச் சேர்ந்த பிரதீப் என்பதும், அவர் ராணுவத்தில் பணியாற்றிவருவதும் தெரியவந்துள்ளது. இந்தச் சம்பவத்தால் குன்னூர் மலைப்பாதையில் சுமார் மூன்று மணிநேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.