நீலகிரி மாவட்டம், கூடலூர் பகுதி விளைநிலங்களில் சமீபகாலமாக யானைகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், இன்று அதிகாலை ஸ்ரீ மதுரை அருகே உள்ள கோழி கண்டிபகுதியில் ஒற்றை காட்டு யானை விளைநிலத்தில் திடீரென நுழைந்தது. இதைப் பார்த்த அப்பகுதி பொதுமக்கள், யானையை விரட்ட சத்தங்களை எழுப்பி கூச்சலிட்டனர்.
நீலகிரி அருகே விளைநிலத்தில் சுற்றித்திரியும் ஒற்றை காட்டு யானை - அச்சத்தில் பொதுமக்கள் - tamil news
நீலகிரி: கூடலூரில் அதிகாலை நேரங்களில் விளைநிலங்களில் சுற்றித்திரியும் ஒற்றை காட்டு யானையால், அப்பகுதி பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.
elephant
இருப்பினும் யானை பொறுமையாக அப்பகுதியில் உலாவியதோடு, அங்கு பயிரிடப்பட்டிருந்த 100க்கும் மேற்பட்ட வாழைகளை சேதப்படுத்திவிட்டு சென்றது. இதுகுறித்து வேதனை தெரிவிக்கும் விவசாயிகள், யானையை கண்காணித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் வனத்துறையினர் விரட்ட தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க:திருமணத்தை மீறிய உறவால் கைதான பள்ளி ஆசிரியை சஸ்பெண்ட்!
TAGGED:
nilgiris elephant news