தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

முதுமலை பகுதியில் சுற்றித்திரியும் அரிய வகை கருஞ்சிறுத்தை

நீலகிரி: முதுமலை புலிகள் காப்பகத்தில் அரிய வகை கருஞ்சிறுத்தை ஒன்று கடந்து சென்றதை சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர்.

rare type of black panther
Mudumalai forest black panther

By

Published : Feb 13, 2020, 6:29 PM IST

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் கடந்த சில ஆண்டுகளாக புலிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தற்போது 80-க்கும் மேற்பட்ட சிறுத்தைகள் இருப்பதாக கணக்கெடுப்பு தெரிவிக்கிறது.

இதில் மூன்று சிறுத்தைகள் கருப்பு நிறத்தில் இருப்பதாக தெரிய வந்துள்ளது. கருஞ்சிறுத்தைகளை பார்ப்பது மிகவும் அரிதாக இருக்கும் நிலையில், முதுமலை புலிகள் காப்பகத்தில் மசினகுடியிலிருந்து சிங்காரா மின்நிலையம் செல்லும் நெடுஞ்சாலையில் கருஞ்சிறுத்தை ஒன்று நடந்து சென்றது.

முதுமலை பகுதியில் சுற்றித்திரியும் அரிய வகை கருஞ்சிறுத்தை

அப்போது அந்த வழியாக சென்ற சுற்றுலா பயணிகள் அதைப் பார்த்து வியப்படைந்தனர். மேலும் அந்த கருஞ்சிறுத்தை சாலையை கடந்து சென்ற காட்சியை படம் பிடித்து சமூக வளைதலங்களில் பதிவிட்டுள்ளனர். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க:பரவிய காட்டுத்தீ : மூலிகைச் செடிகள் எரிந்து நாசம்!

ABOUT THE AUTHOR

...view details