தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தொழிலாளியை கடுமையாகத் தாக்கிய காவல் உதவி ஆய்வாளர்! - A police inspector who severely attacked the worker

உதகை: கூடலூரை அடுத்துள்ள பந்தலூரில் விசாரணை எனக் கூறி கடுமையாக தாக்கிய காவல் உதவி ஆய்வாளர் மீது மனித உரிமை விசாரணை நடத்தக்கோரி தொழிலாளி தனது குடும்பத்தாருடன் கோட்டாட்சியரிடம் மனு அளித்துள்ளார்.

காவல் உதவி ஆய்வாளர் தாக்கியதில் பலத்த காயமடைந்த தொழிலாளி செல்வகுமார்
காவல் உதவி ஆய்வாளர் தாக்கியதில் பலத்த காயமடைந்த தொழிலாளி செல்வகுமார்

By

Published : Nov 30, 2019, 10:12 PM IST

Updated : Nov 30, 2019, 11:06 PM IST

உதகை மாவட்டம் கூடலூரை அடுத்துள்ள பந்தலூர் தாலுக்காவிற்குட்பட்ட தேவலா பகுதியில் வசிப்பவர் செல்வகுமார். இவர் தனியார் தோட்டத்தில் கூலி வேலை செய்து வருகிறார். கடந்த 25ஆம் தேதி இவர் பணிபுரியும் இடத்தில் சம்பளம் சரிவர வழங்காததால் தகராறு ஏற்பட்டது.

இதனையடுத்து காவல் துறையினர் இருதரப்பினரையும் சமரசம் செய்து வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அன்று இரவு செல்வகுமாரை மட்டும் விசாரணைக்காக காவல் நிலையம் வர சொல்லி காவல் உதவி ஆய்வாளர் ஜெயபிரகாஷ் கடுமையாகத் தாக்கியுள்ளார்.

இதனையடுத்து பலத்த காயம் அடைந்த செல்வகுமார், அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நான்கு நாட்கள் சிகிச்சைக்கு பின்னர், மருத்துவமனைக்கு வந்த சக காவல் துறையினர் உதவி ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுப்பதாகவும், மருத்துவமனையை விட்டு வீட்டுக்குச் செல்லுமாறும் அறிவுறுத்தி உள்ளனர்.

காவல் உதவி ஆய்வாளர் தாக்கியதில் பலத்த காயமடைந்த தொழிலாளி செல்வகுமார்

செல்வகுமார் வீட்டிற்குச் சென்ற நிலையில், காவல்துறையினர் இவரை ஏமாற்றி கையொப்பம் வாங்கியதாகக் கூறப்படுகிறது. தன்னை ஏமாற்றியதை அறிந்த செல்வகுமார், கூடலூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு தனது குடும்பத்தாருடன் சென்று காவல் உதவி ஆய்வாளர் மீது மனித உரிமை விசாரணை நடத்தக்கோரி மனு அளித்தார்.

இதையும் படிங்க: காவல் நிலையம் முன்பு, கழுத்தை அறுத்து இளைஞர் தற்கொலை முயற்சி

Last Updated : Nov 30, 2019, 11:06 PM IST

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details