தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குன்னூரில் சுற்றுலாப் பயணிகளைக் கவர்ந்த வன விலங்குகளின் ஓவியம்!

நீலகிரி : குன்னூர் ரயில் நிலையத்தில் அமைந்துள்ள சுவர்களில் வரையப்பட்டுள்ள வன விலங்குகளின் ஓவியம் சுற்றுலாப் பயணிகளை வெகுவாகக் கவர்ந்துள்ளது.

By

Published : Oct 4, 2019, 4:56 PM IST

வண்ண ஓவியங்கள்


நீலகிரியில் இரண்டாம் கட்ட சீசன் தொடங்கியுள்ள நிலையில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் உதகையில் மலை ரயில் பயணம் செல்ல அதிக ஆர்வம் காட்டுகின்றனர். இந்நிலையில் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் குன்னூரில் பழமைவாய்ந்த நிலக்கரி என்ஜின் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள இடத்தைச் சுற்றி சுவர்களில் இயற்கைக் காட்சிகள் வரையப்பட்டுள்ளன.

சுற்றுலாப் பயணிகளைக் கவரும் குன்னூர் ரயில் நிலையம்!

அவற்றுடன் புலி, காட்டெருமை, யானை, மான் போன்ற வனவிலங்குகள் தத்ரூபமாக வரையப்பட்டுள்ளன. இது சுற்றுலாப் பயணிளை வெகுவாக கவர்ந்துள்ளது. மேலும் இந்த இடத்தில் சுற்றுலாப் பயணிகள் புகைப்படம் எடுக்க செல்ஃபி ஸ்பாட் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு உள்ளூர், வெளியூர் சுற்றுலாப் பயணிகள் மட்டுமின்றி, வெளிநாட்டைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளும் ஆர்வமுடன் வந்து புகைப்படம் எடுத்துச் செல்கின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details