நீலகிரி:மேற்குத்தொடர்ச்சி மலையில், சுமார் 688 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட முதுமலைப் புலிகள் காப்பகத்தில் நேற்று (ஆகஸ்ட் 11) 2 யானைகள் உயிரிழந்தன. தெங்குமரஹாடா வனப்பகுதியில் ஆந்த்ராக்ஸ் நோய் தாக்கி உயிரிழந்த 4 வயது மதிக்கத்தக்க ஆண் யானை ஒன்றும், தெப்பக்காடு வனப்பகுதியில் பிறந்து 6 மாதமே ஆகி, புலியால் தாக்கப்பட்டு உயிரிழந்த யானை ஒன்றும் கண்டறியப்பட்டது.
ஆனால், தொடர்ந்து இறந்த யானையின் உடலை, புலியை சாப்பிடவிடாமல் தாய் யானை உள்பட 3 யானைகள் பாதுகாத்து நின்றதால், புலி அங்கிருந்து சென்றுள்ளது.
உயிரிழந்த யானையை விட்டுப் பிரிய மனமில்லாமல் அங்கேயே கூடிய யானைக்கூட்டம்
தகவல் அறிந்து அங்கு சென்ற வனத்துறையினர் 6 மாதமே ஆன யானையின் உடலை மீட்டுப்பிரேத பரிசோதனை செய்ய முயன்றனர். ஆனால், இறந்த யானையின் உடலின் அருகிலேயே நின்று கொண்டிருந்த தாய் யானை உள்ளிட்ட 3 யானைகளும் வனத்துறையினரை, உயிரிழந்த குட்டியின் அருகே நெருங்கவிடாமல் தொடர்ந்து ஆக்ரோசத்துடன் துரத்தின.
உயிரிழந்த யானைக்குட்டியும் அதன் அருகில் யாரையும் அனுமதிக்காத தாயின் பாசப்போராட்டமும்..! - Elephants affection
முதுமலை புலிகள் காப்பகத்தில், புலி தாக்கி உயிரிழந்த 6 மாத யானையின் அருகில் வனத்துறையினரை நீண்ட நேரம் அனுமதிக்காமல், துரத்திய தாய் யானையின் பாசப் போராட்டம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தாய் யானையின் பாசப்போராட்டம்
இறந்த யானையின் உடலின் அருகே தாய் யானை நீண்ட நேரமாக, நின்றவாறு பாசப் போராட்டத்தில் ஈடுபட்ட நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: ’புதிய பேருந்துகளை இயக்க ஜெர்மனியுடன் பேச்சுவார்த்தை’ - அமைச்சர் ராஜகண்ணப்பன்
Last Updated : Aug 12, 2021, 10:54 PM IST