நீலகிரி மாவட்டம் குன்னூரில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் சாலையோரத்தில் 5 ஏக்கரில் காட்டேரி பூங்கா இயற்கை எழில் கொஞ்சும் இடத்தில் அமைந்துள்ளது. குன்னூரில் இருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள காட்டேரி பூங்காவில், பல வகையான மலர் செடிகள் நடவு செய்யப்பட்டு, பராமரிக்கப்பட்டு வருகின்றன.
சுற்றுலாப் பயணிகள் இன்றி வெறிச்சோடி காணப்பட்ட காட்டேரி பூங்கா! - Nilgiris District News
நீலகிரி : காட்டேரி பூங்காவில் பூத்துக் குலுங்கும் வண்ண மலர்களை காண்பதற்கு சுற்றுலாப் பயணிகள் இல்லாமலே அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது.
சுற்றுலா பயணிகள் இன்றி வெரிசோடி காணப்படும் காட்டேரி பூங்கா
கடந்த ஜூலை மாதம் இறுதியில் டேலியா மேரிகோல்டு, பால்சம் உள்பட 30 வகைகளில் 1.5 லட்சம் மலர் நாற்றுகள் நடவு செய்யப்பட்டது. தற்போது இந்த பூக்கள் பூத்துக் குலுங்குகிறது. இந்நிலையில், கரோனா பாதிப்பு காரணமாக, சுற்றுலாப் பயணிகள் இ-பாஸ் பெற்று வரும் நடைமுறை உள்ளதால் மிகவும் குறைந்த அளவிலேயே சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். இதனால் பூங்காவானது சுற்றுலாப் பயணிகளின்றி வெறிச்சோடி காணப்படுவதோடு, பயணிகள் பார்வைக்கு படாமலேயே பூக்கள் அழுகும் நிலை ஏற்படுகிறது.