தமிழ்நாடு

tamil nadu

கோடநாடு கொலை வழக்கில் தீபு, பிஜின்குட்டி ஜாமின் மனுக்களை தள்ளுபடி செய்த நீதிமன்றம்

நீலகிரி: கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் தீபு மற்றும் பிஜின்குட்டி ஆகியோர் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

By

Published : Apr 12, 2019, 6:32 PM IST

Published : Apr 12, 2019, 6:32 PM IST

உதகை நீதிமன்றம்

கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு விசாரணை உதகையில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் சயன், வாளையாறு மனோஜ், தீபு, பிஜின்குட்டி உள்ளிட்ட 10 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். இதில் சயன், மனோஜ் உள்ளிட்ட ஐந்து பேர் நீதிமன்றக்காவலில் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் இன்றைய வழக்கு விசாரணைக்காக உதகை நீதிமன்றத்தில் பத்து பேரும் ஆஜராகினர். அப்போது வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள தீபு, மனோஜ்சாமி, பிஜின்குட்டி உள்ளிட்ட எட்டு பேரும் தங்களை வழக்கிலிருந்து விடுவிக்குமாறு மனு ஒன்றினை தாக்கல் செய்திருந்தனர். இதில் தீபு, மனோஜ்சாமி ஆகியோரின் ஜாமின் மனுவை நிராகரித்த நீதிபதி மற்றவர்களின் மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்டார். அதனைத்தொடர்ந்து வழக்கு விசாரணையை வரும் 26ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

ABOUT THE AUTHOR

...view details