நீலகிரி:பொழுதுபோக்குக்காகவும், இறைச்சிக்காகவும் காட்டில் வாழும் வன விலங்குகளை வேட்டையாடும் பழக்கம் தமிழகத்திலிருந்து வருகிறது. இவற்றைக் கட்டுப்படுத்துவதற்குப் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும், இன்னும் இந்த வேட்டை சம்பவங்கள் நடந்தவண்ணமே உள்ளன.
அந்த வகையில் இன்றுகுன்னூர் அருகே உள்ள சேலாஸ் பாலடா செல்லும் சாலையில் இறந்த கிடந்த காட்டு எருமையைச் சந்தேகத்தின் பேரில் ஆய்வு செய்து பார்த்தபோது அதன் தலையிலிருந்து நாட்டுத் துப்பாக்கி தோட்டாக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டம் 65 சதவீதம் வனப்பகுதி கொண்ட மாவட்டமாகும் . இங்கு குன்னூர் அருகே உள்ள சேலாஸ் பாலடா செல்லும் சாலையில் 4 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டெருமை தலையில் காயத்துடன் இறந்து கிடப்பதாகக் குந்தா வனத்துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தகவலின் அடிப்படையில் குந்தா வனச்சரகர் சீனிவாசன், வனவர் மணிகண்டன், கொலக்கம்பை சப் இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ் மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து இறந்து கிடந்த காட்டெருமையைப் பார்வையிட்டனர்.