நீலகிரி:குன்னூர், கோத்தகிரி சுற்றுவட்டாரப் பகுதிகளில் சமீப காலமாக உணவு மற்றும் தண்ணீர் தேடி அடர்ந்த வனப்பகுதியில் இருந்து வனவிலங்குகள் சாலைகள், குடியிருப்பு, தேயிலை தோட்டங்களில் உலா வருவது வழக்கமாகிவிட்டது. அந்த வகையில் குன்னூர் அருகேவ உள்ள ஹை பீல்டு பகுதியில் கரடி ஒன்று அங்குள்ள சாக்லெட் தொழிற்சாலைக்குள் நள்ளிரவில் புகுந்துள்ளது.
வீடியோ: கடைக்குள் புகுந்து ஹாயாக சாக்லெட் சாப்பிட்ட கரடி - குன்னூர் கரடி
குன்னூரில் தனியார் சாக்லெட் தயாரிக்கும் தொழிற்சாலைக்குள் நள்ளிரவில் புகுந்த கரடி ஒன்று அங்கிருந்த சாக்லெட்களை சாப்பிட்டு சென்றது.
Etv Bharat
அதோடு தயாரித்து வைக்கப்பட்டிருநத சாக்லெட்களை உண்டுவிட்டு சென்றுள்ளது. இந்த சம்பவம் குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. இங்கு உலா வரும் சிறுத்தை மற்றும் கரடியை கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துவருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:அம்பத்தூரில் பொதுமக்கள் மீது கற்களை வீசும் காவல் கண்காணிப்பாளரின் குடும்பத்தினர் - வைரல் வீடியோ