நீலகிரி: குன்னூர் பகுதிகளில் சமீப காலமாக வனப்பகுதியில் இருந்து உணவு மற்றும் தண்ணீருக்காக வனவிலங்குள் குடியிருப்புப்பகுதியில் வலம் வருகின்றன. குறிப்பாக கரடி, காட்டெருமை, சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகள் உலா வருவது வாடிக்கையாக உள்ளது. இந்நிலையில் குன்னூர் அருகே உள்ள உபதலை அரசு ஒன்றிய தொடக்கப்பள்ளியின் சமையலறை கதவை, கரடி ஒன்று உடைத்து பொருட்களைச் சேதப்படுத்திச்சென்றுள்ளது.
இதன்காரணமாக பள்ளி மாணவர்கள் அச்சத்துடனேயே பள்ளிக்கு வந்து செல்கின்றனர். மேலும் பள்ளியைச் சுற்றி புதர்கள் மண்டி கிடப்பதாலும் வனவிலங்குகளும் விஷ ஜந்துக்களும் பள்ளிகளுக்குள் வந்து செல்வதாக மாணவர்கள் புகார் கூறுகின்றனர்.