நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் வனப்பகுதியிலிருந்து கரடி, சிறுத்தை, காட்டெருமை, யானை போன்ற வன விலங்குகள் பொது மக்கள் குடியிருப்புப் பகுதிக்கு அவ்வப்போது உணவு தேடி வருவது வழக்கம்.
இந்நிலையில், உதகை அருகே இத்தலார் பகுதியில் ஹட்டாரி நஞ்சன் என்பவரது வீட்டில் நேற்று திருமணம் நடைபெற்றது. அன்று இரவு விருந்தாளிகளுக்காக உணவு மற்றும் காஃபி விருந்தானது வீட்டார்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அப்போது வனத்தில் இருந்து அழையா விருந்தாளியாக வந்த கரடி ஒன்று திருமண வீட்டில் இருந்த, காஃபி நிரப்பப்பட்டிருந்த கேனை கீழே கொட்டி விட்டு, காஃபியை குடித்துச்சென்றது. இந்தக் காட்சிகளை செல்போனில் படம் பிடித்த வீட்டில் இருந்த நபர் சமூக வலைதளத்தில் பதிவிட்டது வைரலாகியுள்ளது.
திருமண வீட்டிற்கு அழையா விருந்தாளியாக வந்து காஃபி குடித்துச்சென்ற கரடி இதையும் படிங்க: அனுமதிக்கப்பட்ட வழிகளில் மட்டுமே ஊர்வலம் நடைபெற வேண்டும் - காவல் துறை எச்சரிக்கை