நீலகிரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு இடங்களில் வடமாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் ஆயிரக்கணக்கில் பணியாற்றி வருகின்றனர்.
தற்போது கரோனா பாதிப்பால் வேலையிழந்து இருப்பதால், தங்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்குமாறு வடமாநில தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதனை தொடர்ந்து, நீலகிரி மாவட்ட நிர்வாகத்தின் முயற்சியால் அரசு பேருந்து மூலம் ராஜஸ்தான், ஜார்க்கண்ட், பிகார் உள்பட வடமாநில தொழிலாளர்கள் அனுப்பப்பட்டு வருகின்றனர்.
அதுபோல, நேற்று (மே 28) நீலகிரி மாவட்ட நிர்வாகம் சார்பில் 33 பேருந்துகளில், 907 வடமாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதில், குன்னூரில் இருந்து மட்டும் 8 பேருந்துகளில் 233 பேர் சென்றனர். இவர்களை கூடுதல் ஆட்சியர் ரஞ்சித்சிங் தலைமையில், தாசில்தார் குப்புராஜ் மற்றும் அலுவலர்கள் ஆய்வு செய்து வழியனுப்பி வைத்தனர்.
மேலும், கோவைக்கு பேருந்துகளில் சென்று அங்கிருந்து ரயில் மூலம் அந்தந்த ஊர்களுக்கு அனுப்பு வைக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
இதையும் படிங்க:சென்னையில் இன்று 47 விமான சேவைகள் இயக்கம்