தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

8 வயது சிறுமி மாயம் : தேடுதல் பணி தீவிரம்! - nilgiri district news

நீலகிரி : தனியார் எஸ்டேட் பகுதியில் வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்த எட்டு வயது சிறுமி மாயமாகியுள்ளார். தனிப்படை அமைத்து அவரை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

8 வயது சிறுமி மாயம்! தேடுதல் பணி தீவிரம்
8 வயது சிறுமி மாயம்! தேடுதல் பணி தீவிரம்

By

Published : Dec 23, 2020, 9:53 AM IST

நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகே உள்ள கொலக்கம்பை, தூதூர்மட்டம் பகுதிகளில் உள்ள தேயிலைத் தோட்டங்களில் வடமாநிலத் தொழிலாளர்கள் அதிக அளவில் பணிபுரிந்து வருகின்றனர். அந்த வகையில், ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த லட்சுமணன், அவரது மனைவி சுமன் குமாரி ஆகியோர் தூதூர்மட்டம் அருகே உள்ள தனியார் தேயிலைத் தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகின்றனர்.

இவர்களுக்கு ப்ரீத்தம் என்ற மகனும் ப்ரீத்தி குமாரி என்ற மகளும் உள்ளனர். பிரீத்தம் வட மாநிலத்தில் உள்ள அவர்களது உறவினர் வீட்டில் உள்ளார். பெற்றோருடனேயே தங்கியிருந்த பிரீத்தி குமாரி இங்குள்ள ஆரம்பப் பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வந்தார்.

இந்நிலையில், நேற்று (டிச.22) வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்த சிறுமி பிரீத்தி குமாரி திடீரென காணாமல் போயுள்ளார். அப்பகுதியில் உள்ள பல்வேறு இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இதனையடுத்து சிறுமியின் பெற்றோர் கொலக்கம்பை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

அவரது புகாரின்பேரில் குன்னூர் காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் சுரேஷ் தலைமையிலான காவல் துறையினர், வனத்துறையினர் ஆகியோர் அடங்கிய தனிப்படையினர், காணாமல் போன சிறுமி பிரீத்தியை தேடிவருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details