நீலகிரி மாவட்டம், குன்னூரில் இருந்து சுமார் 50 கி.மீ., தொலைவில் சின்னாலக்கோம்பை, யானைபள்ளம், சடையன்கொம்பை, மேல்குரங்கு மேடு கிராமங்கள் உள்ளன. இங்கு 500-க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். கடந்த 52 ஆண்டுகளாக இப்பகுதிக்கு சாலை வசதி செய்து தராததால் இங்குள்ள நோயாளிகளை தொட்டில் கட்டி தூக்கிச் செல்லும் அவல நிலை உள்ளது.
இடி தாக்கி 8 பேர் காயம்: சாலை வசதியில்லாததால் மக்கள் தவிப்பு! - இடி இடித்து 8 பேர் காயம்
நீலகிரி: குன்னூர் பகுதியில் இடி தாக்கி 8 பேர் காயமடைந்த நிலையில், சாலை வசதியில்லாததால் சுமார் 18 மணி நேரத்திற்கு பிறகு அவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
இடி இடித்து 8 பேர் காயம்: சாலை வசதியில்லாததால் மக்கள் தவிப்பு!
இந்நிலையில், நேற்று நள்ளிரவு பெய்த மழையின்போது இடிதாக்கி ஆறு பெண்கள் உட்பட எட்டு பேர் காயமடைந்தனர். இது குறித்து தகவலறிந்து வந்த ஆம்புலன்ஸ் சாலை வசதி இல்லாததால் சிக்கிக் கொண்டது. இதனையடுத்து சுமார் 18 மணி நேரம் போராடியவர்களை, காவல் துறையினர் மீட்டு, மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
சமீபத்தில் இந்தப் பகுதியில் தார்ச்சாலை அமைப்பதாக 1.25 கோடி ரூபாய் மதிப்பில் நிதி ஒதுக்கி தோண்டப்பட்டு கிடப்பில் போடப்பட்டுள்ளது.