நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்துள்ள காசிம் வயல் பகுதியில் வசிப்பவர் குஞ்சப்பா (65). இவர் தையல் தொழில் செய்து வருகிறார். கரோனா காரணமாக தையல் தொழில் நலிவடைந்த நிலையில் தனது தொழிலை புதுப்பிக்க குறைந்த விலையில் தரமான முகக்கவசம் தயாரிக்க முடிவு செய்தார்.
அதன்படி, இரண்டு அடுக்கில் துணியை மடித்து முகக்கவசம் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டார். இந்த முகக்கவசமானது அணிபவர்களின் மூக்கை முழுவதுமாக மூடுவதுடன் சுவாசிப்பதற்கும் சிரமம் இல்லாமல் உள்ளது. தற்போது கடைகளில் முகக்கவசங்களை அதிக விலை கொடுத்து வாங்கும் நிலை ஏற்படுகிறது. இந்நிலையில், குஞ்சப்பா தாத்தா தயாரிக்கும் முகக்கவசங்கள் தரமானதாகவும் விலையும் குறைவாக உள்ளதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.