நீலகிரி மாவட்டத்தில் செயல்பட்டு வந்த 30 அரசு மதுபானக் கடைகள், உயர் நீதிமன்ற உத்தரவையடுத்து மூடப்பட்டுள்ளன. இந்த சூழலில் உதகை அருகே இத்தலார் கிராமத்தில் செயல்பட்டு வரும் அரசு மதுபானக் கடையை அகற்ற வலியுறுத்தி இத்தலார், பெம்பட்டி, போர்த்தி ஆடா உள்ளிட்ட 5 கிராமங்களைச் சார்ந்த 500க்கும் மேற்பட்ட படுகர் இன மக்கள், உதகையில் உள்ள நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
அப்போது, பாரம்பரிய வெள்ளை நிற உடைகளை அணிந்து வந்த அவர்கள், இத்தலார் கிராமத்தில் பள்ளி, கோயில், நியாவிலைக் கடை, பேருந்து நிலையம் ஆகியவற்றின் அருகில் அரசு மதுபானக் கடை கேளிக்கை விடுதியுடன் செயல்பட்டு வருவதாக தெரிவித்தனர்.