நீலகிரி மாவட்டம் மஞ்சூர் முதல் கோவை செல்லும் ஐம்பது கி.மீ சாலை, கெத்தை வனப்பகுதியைக் கடந்து செல்லும் வகையில் உள்ளது. அடர்ந்த வனமான இங்கு யானை, புலி, சிறுத்தை, கரடி உள்ளிட்ட வனவிலங்குகள் நிறைந்த பகுதியாக உள்ளது. இந்த நிலையில் மஞ்சூர் கோவை சாலையில் கெத்தை அருகே இரு தினங்களாக குட்டியுடன் 5 காட்டுயானைகள் முகாமிட்டுள்ளன.
இவை அவ்வழியாக வரும் வாகனங்களை வழிமறித்து வாகனங்களை விரட்டி வருகிறன. இதனால் வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்துள்ளனர். இந்நிலையில் அந்த வழியாக வந்த வாகனம் ஒன்றை ஐந்து யானைகள் விரட்டியுள்ளன. அப்போது வாகன ஓட்டி சாமார்தியமாக வாகனத்தை நீண்ட தூரம் பின் நோக்கி ஓட்டியதால் வாகனத்தில் இருந்தவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.