நீலகிரி: கரோனா ஊரடங்கால் மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளன. இதனால் கர்நாடகம், கேரளா மாநிலத்திலிருந்து மதுபாட்டில்களை வாகனங்களில் கடத்தி வந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனை கண்காணிக்க மாநில எல்லையில் காவல் துறையினர் நாள்தோறும் தீவர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று காலை உதகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மகேஸ்வரன் தலைமையிலான தனிப்படை காவல் துறையினர் உதகை - கூடலூர் தேசிய நெடுஞ்சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.