நிலகிரி:மாவட்டத்தில் சமீபகாலமாக கிராமப் பகுதிகளில் கரடிகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் குன்னூர் அருகேவுள்ள அளக்கரை கிராம பகுதியில் கடந்த 8 மாதங்களாக இரண்டு குட்டிகளை முதுகில் சுமந்தபடி உணவு தேடி கரடி வருகிறது.
தற்போது இரண்டு குட்டி கரடிகள் பெரிய கரடிகளாக வளர்ந்ததை தொடர்ந்து மூன்று கரடிகளாக மீண்டும் அப்பகுதிக்கு வருகின்றன. தேயிலை பறிக்க செல்லும் தொழிலாளர்கள் கரடி தாக்கி விடுமோ என்ற அச்சத்தில் வேலைக்கு செல்லாமல் வீட்டில் முடங்கி கிடக்கின்றனர்.